Description
தோழர் சங்கரின் இந்த நூல், தேசிய இனப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் எனலாம். சிறிய நூல் எனக் கூறுவதைவிடச் சீரிய நூல் எனல் தகும். அந்த அளவுக்கு, தேசிய இனப் பிரச்சினை குறித்த இன்றியமையாத தரவுகள், கருத்துகள், விவரங்கள் எதுவும் விட்டுப் போகாமல், கச்சிதமான முறையில் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.மு.சிவலிங்கம் மார்க்சிய சிந்தனை மையம். இந்திய விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய இனங்களனைத்தும் ஒன்றாகப் போராடி விடுதலை பெற்று, மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான அரசு அமைந்துள்ள நிலையில், இந்திய அரசு இந்துப் பெரும்பான்மையினரின் அரசாக, அவர்களின் நன்மைக்கான அரசாக இருக்கவேண்டும் என்று பா.ஐ.க. சொல்கிற நிலையில் புது வடிவம் பெறுகிறது. ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பதைப் பேசும் பா.ஜ.க.விற்கு எதிராகப் பன்மைக் கலாச்சாரம் நிறுவுவதை முன்வைக்கும் இந்தப் புத்தகம் மிகமிக அவசியமானதாகும். ஆர். இளங்கோவன் உதவித் தலைவர் – DREU
Reviews
There are no reviews yet.