Description
1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டு-மணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் தோய்ந்ததுதான் மேதினம் என்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிக்குமே தெரியும்.அதற்குமேல் மேதினம் உருவான வரலாற்றுப் பின்னணி பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழில் வந்துள்ள எளிய புத்தகம் இதுவே.சம்பள உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காகவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடி வந்தாலும் கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதியது போல அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியான கறுப்பு இனத் தொழிலாளி அடிமையாக நீடிக்கும் வரை வெள்ளை தொழிலாளியின் வாழ்க்கை-யிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய உத்வேகம் பிறந்தது.எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் வெடித்தது.சர்வதேசத் தொழிலாளர் காங்கிரசும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராட உலகத்தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தது.இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசுபிக் வரையிலும் ந்யூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.இந்த நிகழ்ச்சிப் போக்குகள் மேதினத்தை நோக்கி நகர்ந்த வரலாறுதான் இப்புத்தகம்.
Reviews
There are no reviews yet.