Description
இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
In stock
’போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை.
இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
Pages | 112 |
---|---|
Publication Year | 2023 |
பேசும் புதியசக்தி –
மழையும் ஆடுகளும், சண்டையா? சமாதானமா?, பாவம் கரையுமா? குரங்குக் குட்டியும் காட்டுப் பூனையும், வழிகாட்டி, மயில் போட்ட கணக்கு, கேட்டால் கிடைக்கும், வாயாடித்தவளை, போராட்டம், யார் கொடுத்தது? எனும் பத்துக்கதைகளும் சிறார்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவையாகவும், நம்பிக்கையூட்டுபவையாகவும் படைத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் எளியமொழி நடையில், கற்பனைத்தன்மை நிறைந்ததாய்ப் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு, இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் சிறார்க்குரியவை என்றாலும்கூட உள்ளடக்க அடிப்படையில் கவனிப்புக்குரியவையாக அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
(-பேசும் புதியசக்தி, மாத இதழ், ஏப்ரல் 2023, பக்கம் – 29)
Balakrishnan M –
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 10 கதைகளும் அருமையான கதைகள்… ஒவ்வொன்றும் ஒரு ஆழமான கருத்தை, ஒரு நீதியை குழந்தைகளின் மனதில் பதியச் செய்யும். ஐந்தில் வளையாததது ஐம்பதிலும் வளையாது… ஆதலால் சிறுவயதிலேயே இப்படியான கதைகளை வாசிக்கும் குழந்தைகள் நிச்சயம் சமூகத்தில் சிறந்தவர்களாக வலம் வருவார்கள்…
இந்த புத்தகத்தில் பெண் குழந்தைகள்தான் கதையின் நாயகிகளாக வலம் வருகிறார்கள். பெண் குழந்தைகளைப் போற்ற வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களிடத்தில் அனைத்து திறன்களும் பொதிந்து கிடக்கின்றன. அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடவோ, மட்டம் தட்டவோ கூடாது. ஆண்களைவிட மேலானவர்கள் பெண் குழந்தைகள் என்று இப்புத்தகத்தின் மூலம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.
வாழ்த்துக்கள் மோ.கணேசன் சார்… இப்படியான சிறார் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பாரதி புத்தாகாலயத்தின் புக் பார் சில்ட்ரனிற்கு பேரன்புகளும் நன்றிகளும்.
-மு.பாலகிருஷ்ணன், அரசுப்பள்ளி ஆசிரியர், தூத்துக்குடி