Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹120.00
ஒரு திரைப்படம் வெளியானதும், திரையரங்கில் இருந்து கொண்டே அத்திரைப்படத்திற்கான விமர்சனங்களை சமூக ஊடகங்களில்
ஏராளமானோோர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் நிற்காமல், அதற்கடுத்த சில நாட்களுக்கு அத்திரைப்படம் குறித்த விரிவான
விமர்சனக் கட்டுரைகளும் பல்வேறு தரப்பினரால் எழுதப்படுகிறது. திரைப்படங்களைப் பார்த்தவர்கலும் அக்கட்டுரைகளை வாசித்தவர்களும்
அவரவர்க்குத் தோன்றிய கருத்துகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் விவாதங்களை நடத்துவதையும்
பார்க்க முடியும். இது ஒரு ஆரோக்கியமான போக்குதான் என்பேன். ஒரு திரைப்படத்தின் இயக்குநர் தன்னுடைய குழுவினருடன் இணைந்து
உருவாக்கி வெளிப்படுத்தும் கருத்து மட்டுமே சரியாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
16 people are viewing this product right now
அதேபோல, சமூகத்தில் இன்றைக்கும் நிலவும் பொதுக் கருத்தை உடைத்து எறிந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் புதுக் கருத்தையும் கூட அத்திரைப்படம் சொல்லியிருக்கலாம். அதனால் அதனை விவாதித்து ஏற்றுக் கொள்வதும் கூட தேவையானதுதான். அத்திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படமாக பெரும்பாலானோரால் கொண்டாடப்படும் போது, அது குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்குவதும் கூட இயல்பாக நடந்துவருகிறது. உலகளவில் மிகச் சிறந்த படங்களாகக் கருதப்படும் படங்கள் குறித்து அலசி ஆராய்ந்து ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 96 என்கிற தமிழ்ப் படத்தை முழுவதுமாக திறனாய்வு செய்துகூட சமீபத்தில் ஒரு நூல் வெளியாகி இருக்கிறது.
| Pages | 144 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2022 |
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
₹140.00 Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.