Description
வெளிப்பூச்சுக்கு மறுத்தாலும் யாரும் அதை அவ்வளவு எளிதாக மறைத்து விட முடியாது. காலம் தன் கணக்கை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கும். உண்மைகளை பேசும்போது எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அதிகாரத்துக்கு அடிபணிந்து எழுதுபவன் கலைஞனல்ல. புனைவு எப்போது தன்னைத்தான் குறிப்பிடுகிறதோ என தனி மனிதனையும் சமூகத்தையும் நினைக்க வைக்கிறதோ அப்போதே அது காலத்தால் அழியாத நிலையை பெற்றுவிடுகிறது.
A..S.KATHIRAVAN –
திமுக அதிமுக பின்னணியில் இயல்பாக விரியும் ஒரு சாதாரணனின் அகவாழ்க்கையும் புற வாழ்க்கையையும் கலந்த புனைவு. சாதி பொருளாதார வேட்கை மனித காமம் என வாசிப்பில் பல கேள்விகளை எழுப்பியபடி காட்சி படிமங்கள் வாசிப்பவனின் மனதை ஊடுருவிகிறது.