Description
‘நோய் நொடி இல்லாமல், நூறாண்டு காலம் வாழ்க’ என்ற வாழ்த்துகளை நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் சொல்கிறோம். எல்லாரும் நலமுடன் வாழவே விரும்புகின்றனர், அந்த விருப்பம் நிறைவேற உரிய வழிகளைச் சொல்லுகிறது இந்த நூல். டாக்டர் என். கங்கா அவர்கள் எழுதியுள்ள இந்நூலில் 22 தலைப்புகள் உள்ளடங்கியுள்ளன. பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் சீம்பால் தருவதால் பத்து லட்சம் குழந்தைகள் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவர் என்ற ஒரு தகவலில் சோற்றுப் பதம் தெரிகிறது. பிரசவகாலத் தயாரிப்புகள், குழந்தை நேயப் பள்ளி, தூக்கம், ஊடகங்களின் தாக்குதலைக் குறைத்தல், சிறுநீரகப் பாதுகாப்பு, உப்பு – ஊறுகாய்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம், ஆரோக்கிய வாழ்வுக்கான சரிவிகித உணவு பற்றிய ஏராளமான குறிப்புகள் அடங்கிய கருத்துக் களஞ்சியம் இது.
Reviews
There are no reviews yet.