Description
மாற்றத்துக்கான முதல் படி வீடுகளிலிருந்தும் கல்விக் கூடங்களிலிருந்தும் தான் தொடங்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதையாக இருக்கும். பசித்தால், பிடித்தால் கூடுதலாக ஒரு தோசை சாப்பிடலாம் என்கிற நம்பிக்கையை ஒரு பெண் குழந்தைக்கும் தரும் சமூகம் தான் உண்மையிலேயே மேம்பட்ட சமூகம். அந்த வகையில், வகுப்பறைகளிலேயே சமத்துவத்தை ஆழமாகவும் அதே நேரம் அவர்களது மொழியிலும் அறிமுகப்படுத்தும் இந்த நூல். எளிமையாகத் தோன்றினாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி. ஒவ்வொரு நூலகத்திலும் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சமத்துவம் பற்றிய புரிதலின் பொருட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களுடன் உரையாடலை நிகழ்த்தும் அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களுடன் உரையாடலை நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த நூல் போய் சேர வேண்டும்.
-கவிதா முரளிதரன்









Reviews
There are no reviews yet.