Description
கல்வி வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, கல்வியே வாழ்க்கைதான்” என்கிறார் கல்வியாளர் ஜான்டூவீ. இது மாதவனின் கல்வி குறித்த எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. கல்வியின் சாராம்சத்தை உணர்ந்த, கல்வி குறித்த பல சிந்தனைகளை உள்வாங்கிய, ஆசிரியர் பணி மூலம் ஆழமான அனுபவம் பெற்ற, மாதவன் கல்வி பற்றிய எதிர்பார்ப்புகளை விவாதிக்கும்போது கல்வியின் சமூகப் பரிமாணங்கள் நமக்குப் புலனாகின்றன.
– பேரா.ஆர். இராமானுஜம்
‘நீதி உயர்ந்த மதி கல்வி’ என்ற வரிகளை இந்நூல் தாங்கிவருவது மிகச்சிறப்பு. பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் இப்போது தொகுப்பாக வருவது வரவேற்கத்தக்கதே. இந்நூலில் கல்வி தொடர்பான கட்டுரைகள் உள்ளன. கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூகம், ஆகிய அனைவரின் பார்வையிலிருந்தும் அணுகியிருப்பது சிறப்பானதாக உள்ளது
– முனைவர் ச.கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநர்
Reviews
There are no reviews yet.