Description
பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!
Reviews
There are no reviews yet.