Additional information
Publication Year | 2024 |
---|---|
Paper Format | Paperback |
Original price was: ₹210.00.₹200.00Current price is: ₹200.00.
In stock
நீங்கள் இந்த உலகோடு போராடியிருக்கிறீர்கள். அல்லது போராடி யி ருக்கலாம். ஆனால், நான் இதிலிருந்து வேறுபட்டவள். இந்த உலகம்தான் என்னோடு போராடியது. அந்த உலகத்தோடு இயைந்து போக, எனது உள்ளுணர்வுகள் என்றும் இடங்கொடுக்கவில்லை. இந்த உலகத்தில் வாழ அனைவரும் போராடிக்கொண்டிருக்கலாம், இந்த உலகமோ என்னோடு வாழப் போராடிக்கொண்டிருந்தது. இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. அதை நான் பொருட்படுத்தவே இல்லை. எனக்குள் ஒரு நபராக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றுக்கு நான் கவிதை என்று செல்லமாக அழைத்து பெயரிட்டிருக்கிறேன்.
ஏற்கனவே, கவிதை என அழைக்கப்படும் ஒன்றுக்கும் இதற்கும் அதிக வேறுபாடு உண்டு. கவிதையை எப்படி அணுக வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படி எனது கவிதைகளையும் நீங்கள் அணுகலாம். ஆனாலும், அதற்குள் இருக்கும் உணர்வெழுச்சிகளையும், விமர்சனங்களையும், உள்ளுணர்வின் தீராத வேட்கைகளையும், மரம் இலைகளை
உதிர்த்துவிடுவதைப்போன்று அநாயாசமாக எடுத்து வீசி எறிந்துகொண்டிருப்பவை எனது கவிதைகள்.
Publication Year | 2024 |
---|---|
Paper Format | Paperback |
Reviews
There are no reviews yet.