Description
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி கோ’ என்ற ஆடல், பாடல் காட்சி என கொ.மா.கோ. இளங்கோவின் பேனா கற்பனைச் சிறகடித்து பறக்கிறது. கதைகளைப் படிக்கும் சிறார் கற்பனை வளம் சிறப்பதோடு வாசிப்பு ஓர் இன்பம் என்பதையும் உணர்வர்.
Reviews
There are no reviews yet.