பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

140.00

பணமதிப்பு நடவடிக்கையின் நீண்டகால மற்றும் உடனடி விளைவுகளை துல்லியமாகவும் உதாரணங்களைக் கொண்டும் விளக்கியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டாலும். இந்தப் புத்தகம் கூறியிருக்கும் அனைத்து விளைவுகளையும் தற்போது கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் (2018) கறுப்புப் பண ஒழிப்புக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவிடாது என்று அறிவித்திருக்கிறது.

In stock

SKU: 18256 Category: Tags: , , , , , , , , Product ID: 42278

Description

எப்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டனவோ அப்பொழுதே 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை ஒழிப்பதற்காக சொல்லப்பட்ட காரணம் அர்த்தமற்றதாகி விட்டது. CMIE 15 இலட்சம் பேர் பணமதிப்புநீக்க நடவடிக்கையால் வேலை இழந்துள்ளதாகவும், 15 சதவீத அளவிற்கு விவசாய வர்த்தகம் 2017ஆம் ஆண்டு குறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1.5 அளவிற்கு இந்த நடவடிக்கையினால் குறைந்துள்ளது எனவும் அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. பண மதிப்புநீக்க நடவடிக்கையினால் அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக ரிசர்வ் வங்கியின் இலாபம் பெருமளவு குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2016க்குப் பின்பும் கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு வீழ்ச்சியடைவதற்குப் பதிலாக இன்னும் 2.6 லட்சம் கோடி டாலர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது (2017). மதிப்புநீக்கம் செய்யப்பட்ட பணத்தில் 99.3 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி (2018) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அரசால் ரொக்கப்பணமாக கறுப்புப்பணம் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது தவறு என நிரூபணமாகிவிட்டது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணமதிப்பு நீக்கம்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018