Description
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்டத் தோண்ட அருவாகாமல் (முடிவில்லாமல்) நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன. – கி.ராஜநாராயணன் நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை, கி.ரா. வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். கி.ரா-கரிசல் காட்டுக் கதை சொல்லி என்றால், கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்கிறார். – மு. முருகேஷ் பாபு
Reviews
There are no reviews yet.