Availability: In Stock
Author:

பறவைகள் புரளிகளும் அறிவியல் பார்வையும்

80.00

In stock

Paravaikal Puralikalum Ariviyal Parvaiyum – பறவைகள் புரளிகளும் அறிவியல் பார்வையும்

பறவைகள் குறித்து எண்ணற்ற கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி உள்ளார். “பறவைகள் புறளிகளும் அறிவியல் பார்வையும்” என்று தலைப்பிட்டுள்ள பறவைகள் குறித்த முனைவரின் இந்த நூலை வாசிக்கும் போது பறவைகளும் இந்த உலகில் வாழ தகுதி உடைய ஓர் உயிரினம் என்பதை நாம் எல்லாரும் உணர்வோம். பறவைகள் குறித்து நமக்கு இருக்கும் பல அறியாமையை அகற்றும் விதமாக அறிவியல் பூர்வமாக இந்த நூலை எழுதி இருக்கின்றார். கிளி ஜோசியம் நாம் பார்த்திருப்போம் அல்லது கிளி ஜோசியம் பார்க்கும் மனிதர்களை நாம் பார்த்து இருப்போம். பெரிய மருத்துவமனைகள் இருக்கும் தெருக்களில் கிளி ஜோசியம் சொல்லும் ஜோசியக்காரர்கள் பெரும்பாலும் இருப்பார்கள். நான் பணிபுரியும் மருத்துவமனை அருகிலும் கூட அப்படி ஒரு ஜோசியக்காரர் இருக்கிறார் கூண்டுக்கிளியுடன். நோயில் இருந்து நம் உறவினர் விடுபடுவாரா மாட்டாரா என மருத்துவர்கள் அறிவுரை கொடுத்தாலும் சில மக்களின் நாட்டம் என்னவோ இந்த கூண்டுக் கிளியுடன் தான் இருக்கிறது,உங்க உறவினர் பிழைப்பார் என கிளி சொல்வதாக ஜோசியக்காரர் சொன்னார் இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பார்கள், இல்லையேல் வேறு பெரிய மருத்துவமனைக்கு போவார்கள். இவை எல்லாம் அறிவிற்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட விசயங்கள் என்பதை இந்த நூலின் ஆசிரியர் எளிமையாகவும் அறிவியல் மனப்பான்மையோடும் விளக்கி கூறுகிறார். சிட்டுகுருவி முதல் கழுகு வரை நாம் காணும் பறவைகளில் எல்லாம் ஏதோ ஒரு அறியாமை நம்மிடம் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதை எல்லாம் உணரும்படியாக தமிழ்மொழியில் சிறப்பாக இதில் விளக்கி கூறுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.
வாழ்த்துகள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பறவைகள் புரளிகளும் அறிவியல் பார்வையும்”

Your email address will not be published. Required fields are marked *