Description
பாட்டி கதை சொல்வது எல்லோருக்கும் வாய்க்கும். ‘செம்பருத்திப் பாட்டி’ கதை சொன்னால்?குட்டிப் பாப்பாக்களும்,தம்பிகளும் அழகானவர்கள்,அமுதூறும் கண்களில் கொஞ்சும் மொழி பேசித் திரியும் தேவதைகள்.அம்மா,அப்பாவைப் பங்குபோட இன்னுமொரு பாப்பா போட்டிக்கு வந்தால்…சண்டை,கோபம்;கைகளில் கிடைப்-பவையெல்லாம் உடைபடும்,கிழிபடும்,காணாமல் போகும்.இங்கும் ஒரு பாப்பாவிற்கு அழகான குட்டித் தம்பி.வழக்கம்போல பாப்பாவிற்கு கோபம்,அம்மா மீதும்,அப்பா மீதும்,பாட்டி மீதும்.யார் அவளை தேற்றுவது?செம்பருத்திப் பாட்டி!செம்பருத்திப் பாட்டியா?ஆமாம்!செம்பருத்திப் பாட்டி கதைசொல்லி யாரையும் வீழ்த்திவிடுவாள்.வீட்டில் சண்டை போடும் பாப்பா,தம்பிகளுக்கு கதை சொல்லி சண்டை நிறுத்தம் செய்ய செம்பருத்திப் பாட்டி வருகிறாள்!பராக்!பராக்!பராக்!ஜெ.தேவிகா மலையாளத்தில் எழுதிய “மணிக்குட்டிக்கு பூக்கதைகள்’’ என்ற கதையை தமிழில் யூமா வாசுகி,சரளமான நடையில் தெளிவாக குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மொழியாக்கம் செய்துள்ளார்.
Reviews
There are no reviews yet.