Description
“இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய மக்களிடம் கொண்டுசென்று அப்படைப்பு பற்றிய உரையாடலை நிகழ்த்தியவர்,விவாதங்களை வளர்த்தவர்.அந்த அனுபவங்களில் சிலவற்றை இந்நூலில் உள்ள கட்டுரைகளின் வழியே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை, ‘நீத்தா’ எனும் குஜராத் பெண்ணின் நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை,உத்திரப்பிரதேசப் பெண் குடியாவுக்கு நேர்ந்த அநியாயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடந்த உரையாடல் அனுபவங்கள்,நம்மையும் இத்தகைய உரையாடலுக்குத் தூண்டும் வகையில் உள்ளன.”
Reviews
There are no reviews yet.