Description
11 பேரும் வேறுபட்ட கல்வி சமூகப் பொருளாதார பின்புலம் கொண்டவர்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல்வேறு காலகட்டத்தில் பணியாற்றியவர்கள். சோஷலிசம் என்கிற ஒற்றைக் கருத்தாக்கம் அவர்களை ஒரே புள்ளியில் இணைக்கிறது. ஒவ்வோர் அத்தியாயமும் நம்மை வீறுகொண்டு எழச்செய்யும் வல்லமை பெற்றுள்ளது. ஏகாதிபத்தியம் மற்றும் ஆளும் வர்க்க அநீதிகளை எதிர்ப்பது, பெண்ணுரிமை, மண்ணுரிமை இரண்டுக்கும் குரல் கொடுப்பது, அடக்குமுறைகளைத் துணிச்சலாக எதிர்கொள்வது, கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத பற்றுதலோடு சமரசமின்றிப் போராடுவது, சிறை வாழ்க்கையைத் துச்சமென மதிப்பது போன்ற பொதுவான பண்புகளை இவர்கள் அனைவரிடமும் காண முடிகிறது. அதேபோல் அவரவருக்கான தனித்த பண்புகளையும், பணிகளையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. – உ. வாசுகி சிபிஐ(எம்), மத்தியக்குழு உறுப்பினர்
Reviews
There are no reviews yet.