Description
ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது உங்களைத் தேற்றியதுண்டா? பாரீஸ் நகரில் வசிக்கும் பாஸ்கல் என்ற சிறுவனது வாழ்க்கையில் இவை அத்தனையும் நிகழ்ந்தது. உயிர் அற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என்று எளிமையாக விளக்குகிறது ‘ரெட் பலூன்’ புத்தகம். குழந்தைகள் உலகில் நேசமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடப்பதை உணர்த்தும் கதை.
Reviews
There are no reviews yet.