Description
இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் ‘சாதி’.சாதிக்கு எதிராய் இதுவரை பல்வேறு முனைகளிலும் தொடுக்கப்பட்ட போர்கள் எதுவும் முழு வெற்றி காணவில்லை.சாதியின் அடிப்படை,தோற்றம்,இருப்பு நிலை,இயங்கு விதிகள் எல்லாம் மீண்டும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் புரிந்து கொள்ளப்படுவதும் மனத் தடையற்று விவாதிக்கப்படுவதும் இன்றைக்கு உடனடித் தேவையாக முன்வந்துள்ளது.ஆனால் இருக்கின்ற ஏற்றத் தாழ்வான நிலையின் மூலம் பலன் பெற்றவர்கள் இந்த விவாதத்தை நடக்கவிடாது செய்வதில் மிகுந்த ஒற்றுமையோடு செயல்படுகின்றனர்.அத்தோடு பொதுவான கருத்துத் தளத்தை தங்கள் ஊடக,அரசு இயந்திர ஜனநாயகமற்ற அமைப்புகளின் பலத்தால் பொய்களாலும்,அரை உண்மைகளாலும் நிரப்புகின்றனர்.இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடும் எத்தனத்தோடு சில தரவுகள்,புள்ளி விவரங்கள் விவாதப் புள்ளிகளை முன்வைப்பதே இந்நூலின் நோக்கம்.
Reviews
There are no reviews yet.