Description
அடிப்படை விஷயங்கள் இவைதான். இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இந்த பரிசோதனைகளை மாறுபாடு செய்து, செய்து பார்க்கலாம். சோதனைகள் செய்வதற்கு சொல்லப்பட்டுள்ள பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு சமமாக எந்த ஒரு பொருளையும் நீங்கள் பயன்படுத்தி பரிசோதனைகளை செய்து மகிழலாம். உதாரணமாக மணல் தேவை என்பதற்கு மணல் கிடைக்கவில்லை என்றால் வீட்டிலுள்ள அரிசி, பருப்பு, உளுந்து என்று எதையாவது அம்மாவைக் கேட்டு எடுத்துபயன்படுத்தி பரிசோதனைகளை செய்து விட்டு, பிறகு மீண்டும் அம்மாவிடம் கொடுத்து விடவும். மேலும் இந்த பரிசோதனைகள் பலவற்றில் கத்தி, நெருப்பு போன்றவைபயன்படுவதால் பெரியவர் துணையுடன் செய்யவும். பெரியவர்களும் பல சோதனைகளை மாற்றி அமைத்தும் செய்யலாம். இந்த அனைத்து சோதனைகளையும் செய்து பாருங்கள்! மகிழுங்கள்! இந்த பரிசோதனைகள் பற்றிய விளக்கங்களை நீங்களே தேடி கண்டுபிடித்தால் அறிவியல் மிக சுகமாகும்.
Reviews
There are no reviews yet.