Description
தமுஎகசவின் திரை இயக்கத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லும் முன்னணிப் படைவீரர்களில் ஒருவரான எழுத்தாளர் களப்பிரன் தன் சக தோழர்களை படம் பார்க்க அழைக்க விடுத்த அறைகூவலாகவே இக்கட்டுரைகளை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்கிறது. அப்படத்தின் இயக்குநர் பற்றிய அறிமுகத்தைச் செய்கிறது. படத்தின் கதைச்சுருக்கத்தையும் படத்தின் முக்கிய காட்சிகள் பற்றிய அறிமுகத்தையும் செய்கிறது. அத்தோடு நில்லாமல், சமகால பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளுடன் அப்படத்தை இணைத்து ஒரு முடிப்புரையும் கொண்டு நிற்கிறது. ஆகவே ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்க சுவையாகவும் ஒரு திரைப்படத்தைப்போல விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.ச.தமிழ்ச்செல்வன்
Reviews
There are no reviews yet.