Description
இந்நாவலின் மையக் கதாபாத்திரமான அமர்நாத், தன் படிப்பு, எழுத்து, மனிதாபிமானம், சிந்தனை, போன்ற எல்லாம் அரசால் உளவு பார்க்கப்படுவதை அறிகிறார். நாட்டில் அதுவரை குடிமக்கள் அறியாத சம்பவங்கள் நிகழ்கின்றன; மக்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. மத்தியதர வர்க்கம் மதத்தை அளவுகோலாக வைத்து அனுபவங்களை இரண்டாகப் பாகுபடுத்துகிறது. காவலர்கள் தொடர்ந்து நாட்டில் பரவும் அறிவைக் கண்டுபிடிக்கவும் கட்டுப்படுத்தவும் உளவு பார்க்கின்றனர். அறிவாளி வர்க்கம், கருத்துலக நெருக்கடியை உணர்கிறது. அமர்நாத்தின் நண்பரான கல்லூரி ஆசிரியர் சுரேஷ், அரசு பரப்பும் ஒற்றைக்கருத்தின் தாங்கமுடியா அழுத்தத்தை அறிந்தவர். கிணற்றிலிருந்து எடுக்கப்படும் சிறுவனின் பிணம் கூட இரண்டு மதங்களில் ஒன்றாய் பார்க்கப்பட போட்டி நடக்கிறது. தொலைக் காட்சியில் நுட்பமாய் அரசுக்குச் சார்பான பிரச்சாரமும் உணர்வைத் தூண்டும் காரியங்களும் நிகழ்கின்றன. இரண்டு தளங்களில் நடக்கும் கதையின் இன்னொரு தளத்தில், உலகை நடுநடுங்கவைத்த வரலாற்றுப் பாத்திரத்தின் பெயருடன் ஒரு சிறுவன் தோன்றுகிறான். அச்சிறுவனின் பெயர் ஹிட்லர். திபெத்திலுள்ள ஷம்பாலாவுக்குப் பயணம் போன ஒரு நவீன சாமியார் அமைச்சனாகியுள்ள இந்த இரண்டாம் ஹிட்லரைச் சந்திக்கிறார்.
உலக அதிகாரமெல்லாம் மையம் கொண்டிருப்பது ஷம்பாலா என்கிறார். நாவல் முழுவதும் அரசியல் குறியீடு போல செயல்படுகிறது.
Reviews
There are no reviews yet.