Description
தமிழகத்தில் உள்நாட்டு ஆட்சியாளர்களின் போர்ப் படைகள் பற்றிக் கூறும்போது, விஜய நகர, தஞ்சாவூர் நாயக்கர்கள், மராட்டிய ஆட்சி யாளர்கள், ஆற்காடு நவாப் படைகள் பற்றிய தகவல்களுடன் ஆங்கிலேயப் படைகளும் பாளையக்காரர்களின் சண்டைகளும் பற்றியும் விவரிக்கப் படுகின்றன. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் படைகளில் உள்ளூர்காரர்கள் நியமிக்கப்பட்டது பற்றிய இயலில் ஏராளமான தகவல்கள் விரவிக்கிடக்கின்றன. புதுச்சேரியில் ஆங்கிலேயர்களால்
இடிக்காமல் விடப்பட்ட ஒரேயொரு பொதுக் வெடிமருந்துத் தொழிற்சாலை கட்டடம்மட்டுமே என்ற குறிப்பு கவனத்துக்குரியது.
படைக்கு சென்னையில் ஆங்கிலேயப் உள்ளூர்காரர்களை தாழ்த்தப்பட்டவர்களை அமர்த்தியது, தொடர்ச்சியாக சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகள் விளக்கப்படுகின்றன. தவிர, மணிலா படையெடுப்பு (1762)பற்றிய தகவல்களும் தனியொரு நூலாக எழுதத்தகுந்தவை. விடுதலைப் போரின் தொடக்கம் 1857 என்று சொல்லப்படுவதற்கு முன்னரே, 1806 –ஆம் ஆண்டிலேயே வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி தோன்றவும் தோல்வியுறவும் காரணமாக இருந்தவற்றுடன், அந்தத் தோல்விக்குப் பிறகு ஆங்கிலேயப் படையின் தொடர் நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. படிக்க உகந்த நூல்.
Reviews
There are no reviews yet.