Description
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள்.அவை இரண்டும் நாள்முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின.மாலைநேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின.அவை ஒருநாள் அம்மாவின் பின்னல்நூல்ப் பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன.அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும் மனிதர்கள் வாழும் வீட்டைப் பார்த்ததில்லை.அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் வியப்புடன் பார்த்தன.பலவகையான செடிகளையும் பூக்களையும்கூட கண்டு திகைத்துப்போயின.கடைசியில் அவை ஆபத்தை எதிர்கொண்டன.வயல் எலிகள் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பித்தன?புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே.
Reviews
There are no reviews yet.