Description
ஆத்திராமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.வு.சி யைக் கைது செய்கிறது.உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிர்த்தம் செய்து தெருவில் இறங்கினார்.இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது.வ.வு.சிகைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது.பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்க்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.ஒரு முஸ்லிம்,ஒரு பறையர்,ஒரு பூசாரி,ஒரு ரோட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர்.தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாக பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள்.துணி துவைக்க சலவை தொழிலாளிகள் மருகிரர்கல்.துப்புரவு பணியாளர்கள் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுக்கின்றன.தொழிர்சங்கமும் பொதுமக்களும் இரண்டுறக் கலந்து நின்று வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண் முன்னே விரிகிறது.
Reviews
There are no reviews yet.