Description
பல்வேறுபட்ட சமூக வலைதளப் பின்னல்களில், ஒருநாளின் பெரும் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் மக்களின், குறிப்பாக வளரிளம் பருவத்தினரின் கவனம் புத்தக வாசிப்பின் மேல் திரும்ப வேண்டும் என்கின்ற நல்லெண்ணமும், அறம் சார்ந்தும், நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்ததுமான நற்கருத்துக்கள் சிறுவர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்ற உந்துதலுமே இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவரக் காரணமாகும்.
Neerai Aththippoo –
நற்பண்புகளை மனத்துள் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கும் பாங்கு, நூலாசிரியர் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலும், பண்புநிலை மேம்பாட்டிலும், அதன்வழி சமுதாய மேம்பாட்டிலும், உலக அமைதியிலும் கொண்டிருக்கும் உன்னத ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. நூற்பயன் மிகுதிப்படுத்தும் முயற்சி வாசிப்புத்திறனில் குழந்தைகளை மேம்பட வைக்கும் என்பது உறுதி. ஆசிரியரின் எளிய நடையும், உயரிய கொள்கையும் ஒவ்வொரு கதையும் வெளிப்படுத்தும் உணர்வின் உச்சத்தில் மிளிர்கிறது. -பதுருமணாளன்