Description
ஆண்களும்.பெண்களுமாக அனைத்து மக்களும் களமிறங்கிப் போராடிய மாபெரும் ஆயுதப் போராட்டமாக தெலுங்கானா ஆயுதப்போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளனாக,மக்களின் பேரெதிரியாக விளங்கிய நிஜாம் மன்னனுக்கு மிகப்பெரும் சவாலாகவும்,இந்தியா முழுவதிலுமிருந்த நூற்றுக்கணக்கான மன்னராட்சி மாநிலங்களின் அத்துமீறல்களுக்கு மரண அடியாகவும்,மொழி வழி மாநிலப் பிரிவினைக்குக் தூண்டுகோளாகவும் இப்போராட்டம் அமைந்தது.நிலப்பிரபுத்துவ அரசியலுக்கு ஒரு வலுவான எதிர்சக்தியாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவெடுக்க காரணமாக தெலுங்கான ஆயுதப் போராட்டம் இருந்தது.வீரஞ்செறிந்த இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி வழி நடத்திய தோழர் பி.சுந்தரய்யா இந்நூலைத் தன் அனுபவங்களின் வாயிலாக விவரித்திருக்கிறார்.ஒரு காலகட்டத்து மக்கள் போராட்டத்துக்கான ஆவணம் இது.
Reviews
There are no reviews yet.