Description
தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசத்தின் வரலாறு தமிழரின் வரலாறாகத் தொடங்குகிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் புதிய வரலாற்றில் வசிப்பிடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிந்துவெளி தொடங்கி சங்ககாலம், இடைக்காலம், காலனியகாலம் ஊடாகச் சமகாலம் வரை தமிழரின் வாழிடங்கள் காட்டும் படிமலர்ச்சியைப் புதிய வெளிச்சங்களுடன் இக்குறுநூல் பேசுகிறது. இதனைப் பண்பாட்டு மானிடவியலாகக் காட்டுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். இந்த நூல் காட்சிப்படுத்துகின்ற சிந்துவெளிச் சான்றுகள், சங்க இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று உண்மைகள், காலனியப் பதிவுகள், சமகாலப் போக்குகள் யாவும் தமிழரின் தனித்துவமான வரலாறாகும். இதில் ‘தமிழரும் சிந்துவெளியும்’ புதிய பேசு பொருளாகியுள்ளன. இந்தப் பெருமித காட்சிகளை இந்த நூல் நம் வசப்படுத்துகிறது. – த.விவானந்தராசா சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை
Reviews
There are no reviews yet.