Description
“97சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது.மீதி1சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும்.ஆனால் மனிதகுலம் எந்தெந்த வகையிலெல்லாம் நீர் கிடைக்குமோ அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உறிஞ்சத் துவங்கி விட்டது என்கிற அபாய எச்சரிக்கையுடன் துவங்குகிறது புத்தகம்.வளர்ந்த நாடுகள்85சதம் நீர்வளத்தை தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துகின்றன.ஆப்பிரிக்க நாடுகள்88சதவீத நீரையும் பல வளரும் நாடுகள்70சத நீரையும் விவசாயத¢துக்காகப் பயன்படுத்துகின்றன.இந்தியாவும் சீனாவும் நிலத்தடி நீரில்100சதவீதத்தையும் பயன்படுத்திவிட்டன.இந்தப் பின்னணியில் நீர் வியாபாரம்-நீரைத் தனியார்மயமாக்குதல் நடந்து வருகிறது.1987ல் கொண்டுவரப்பட¢ட தேச¤ய நீர்க்கொள்கை நீர்ப்பயன்பாட்டில் முன்னுரிமை பற்றிக் குறிப்பிடும்போது முதலில் குடிநீர் அடுத்து நீர்ப்பாசனம்,மூன்றாவதாக மின்சார உற்பத¢தி நான்காவதாக தொழிற்சாலை/மற்ற பயன்பாடுகள் என வரிசைப்படுத்தியது.ஆனால்2002புதிய தேசிய நீர்க்கொள்கையில் இந்த முன்னுரிமை இல்லை.நீர் வியாபரத்துக்கு அகலக் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.இப்பின்னணியில் அனைவருக்கும் பொதுவான சொத்தான நீர்வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பத்துக் கட்டளைகளுடன் புத்தகம் முடிவடைகிறது.”
Reviews
There are no reviews yet.