Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹450.00
உலக உருண்டையைப் பிணைத்திருந்த சங்கிலியின் இரும்புக் கரணைகள் தகர்ந்து சிதறுகின்றன. தன் பலம் அனைத்தையும் ஒன்றிணைத்து சம்மட்டியை ஓங்கி நின்கிறான் வீரத் தொழிலாளி. உலகின் அனைத்துக் கண்டங்களிலும் எதிரொலித்தது அதன் விடுதலை முழக்கம். இருள் விலக்கும் செங்கதிரோன் போல் சோவியத் ருஷ்யாவில் புதிய பொதுவுடைமைச் சமூகம் உதித்தது.
14 people are viewing this product right now
எஜமானனுக்காக உழைக்காமல் தனக்காகவும் தான் நேசிக்கும் உலகின் சக மனிதனுக்காகவும் அச்சமின்றி நேர்மைத் திறன் பெற்று விருப்புடன், மகிழ்வுடன் உழைக்கும் ஆற்றல்மிகு புதிய மனிதர்கள் தோன்றினர்.
திட்டமிடல்களால் ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு, உற்பத்தி ஆற்றலின் உயர் நிலையை அடைந்தது. கனவுகள் மெய்யாகின. தொழிலாளியின் உன்னத மாண்புகள் ஒளிர்ந்தன.
அரசையும் அதன் அமைப்புகளையும் தொழிலாளி தலைமை ஏற்றான். மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படைத்தளித்த பொதுவுடைமை மனிதர்கள் – தோழர், நிறைத்தனர் நிலத்தை.
ஒளி ஊடுருவும் அழகியப் படிகத்தின் எழில்மிகு தோற்றம் கொண்டு மிளிர்ந்தது ‘தொழிலாளர் குடும்பம்’.
₹200.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.