Availability: Out of Stock
Author:

வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்

1

380.00

Out of stock

இந்நூல் பல்வேறு தரவுகளை உள்ளடக்கி கூடியவரை விருப்பு வெறுப்பு இல்லாமல் விஷயங்களைப் புட்டு வைத்துள்ளன.
தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்குத் தமிழீழம் பற்றிய சரியான புரிதல் இல்லாததும், தமிழீழப் பற்றுள்ள சில தலைவர்கள் வரலாற்றைத் தங்களுக்கேற்பத் திருத்தி எழுதிக்கொள்வதும், தமிழ்நாட்டிலுள்ள சாதிவெறியில் எப்படி ஈழத் தலைவரின் சாதியையும் திருடிக்கொண்டதைப் பற்றியும், ராஜீவ் காந்தி கொலை நடத்தப்பட்ட விவரத்தையும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட சக்திகளுக்கு ஏற்பட்ட சகோதர யுத்தங்களைப் பற்றியும், தக்க ஆதாரங்களுடன் லஜபதிராய் இந்த நூலில் விளக்கியுள்ளார்.
40 ஆண்டுகள் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பல கோணங்களில் ஆராய்ந்து தக்கத் தரவுகளுடன் கடும் உழைப்பில் வெளிக்கொண்டு வந்துள்ள தோழர் லஜபதிராயின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அவரது முடிவுகள் சிலவற்றுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும் இந்நூல் காலத்தின் கட்டாயம். வரலாற்றின் பல விட்டுப்போன பக்கங்களைத் தெரிந்துகொள்வதற்கான அரிய முயற்சி. தோழர் லஜபதிராயின் இந்நூலை அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் படிக்க வேண்டும். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

கே.சந்துரு,
மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்.

Description

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட சக்திகளுக்கு ஏற்பட்ட சகோதர யுத்தங்களைப் பற்றியும், தக்க ஆதாரங்களுடன் லஜபதிராய் இந்த நூலில் விளக்கியுள்ளார்.

1 review for வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்

  1. mathan

    இதுவரை ஈழம் குறித்து தமிழில் வெளிவந்த நூல்களிலேயே மிகவும் மோசமானது, வன்மம் நிறைந்தது லஜபதி ராயின் இந்த நூல் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையையே மறுக்கிறது. எழுத்துகளில் அத்தனை அருவருப்பு.
    தமிழர்கள் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களே இல்லை என்று முன்வைக்க முயல்கிறார். மலையகத் தமிழர்களை தென்னிந்திய தெருப்பொறுக்கிகள் என்று சொன்ன இனவெறியன் அநாகரிக தர்மபாலாவை அடையாளமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு நீலம் பேச முயல்வது மோசமான அரசியல். இந்த அரசியல் வன்மத்தை சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

Add a review

Your email address will not be published. Required fields are marked *