Description
ஹாங்காங்கின் கட்டிடப் பணித்தலங்கள் தோறும் உயர்ந்து நிற்கும் இன்ந்த மூங்கில் சாரங்கள், ஹாங்காங்கின் சாரத்தை மெளனமாகப் பறைசாற்றுகிறது. இன்றைக்கு ஹாங்காங் ஒரு பின்னடைவைச் சந்திதிருக்கலாம். ஆனால் மூங்கில் சாரங்களைப் போலவே ஹாங்காங் மக்கள் ஒத்திசைவும், திண்மையும்,நெகிழ்வும் உடையவ்ர்கள். இந்த சாரங்களைப்போல் அவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள்.
ந அப்துல் ரஹ்மான் ஹாங்காங் (verified owner) –
எம்பிஏ படித்து விட்டு தொழில்-வணிகம் செய்பவர்களை விட வணிகப் படிப்புகளைப் படிக்காமல் தொழில்-வணிகம் செய்பவர்களே அதிகம். அவர்களில் சிலருக்கு கல்விப் புலம் சார்ந்த தொழில்-வணிக நுட்பங்களை அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அவர்களுக்காக எளிமையான வழிகாட்டி நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. பொறியியலை நம்மைப் போன்ற பொறியியல் படிக்காதவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்யும் நூல்கள் இருந்தால் எப்படி இருக்கும்? பொறியாளர் மு. ராமனாதன் இந்து தமிழ் திசை நாளிதழிலும், பொறியியல் துறை சார்ந்த இதழ்களிலும் எழுதிய கட்டுரைகள் நூலாக வந்து நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறது.