விடமாட்டேன் உன்னை-மோ. கணேசன்

விடமாட்டேன் உன்னை-மோ. கணேசன்

(1 customer review)

80.00

ஓர் எழுத்தாளர் எது மாதிரியான கதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அமானுஷ்யம் கலந்த ஒரு கதையை, அதுவும் ஒரு நாவலை எழுதுவதற்கு கூடுதல் திறமை வேண்டும் என்பது மோ.கணேசன் எழுதிய ‘விடமாட்டேன் உன்னை’ நாவல் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. முதல் அத்தியாயம் அதிரடியாய் ஆரம்பித்து, அந்த அதிரடி சரவெடியாய் ஒவ்வொரு அத்தியாயமாய் வெடித்து, அமர்க்களப்படுத்துகிறது. மோ.கணேசன் அவர்கள் இந்த ஒரு நாவலோடு தன் எழுத்துப்பணியை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து இது போன்ற அறிவியல் ரீதியான, மருத்துவ ரீதியான படைப்புகளைத் தர வேண்டும் என்பதே என் விருப்பம். – ராஜேஷ்குமார் கிரைம் கதை மன்னர்

In stock

SKU: 17967 Category: Tags: , , , , , , Product ID: 2571

Description

ஓர் எழுத்தாளர் எது மாதிரியான கதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அமானுஷ்யம் கலந்த ஒரு கதையை, அதுவும் ஒரு நாவலை எழுதுவதற்கு கூடுதல் திறமை வேண்டும் என்பது மோ.கணேசன் எழுதிய ‘விடமாட்டேன் உன்னை’ நாவல் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. முதல் அத்தியாயம் அதிரடியாய் ஆரம்பித்து, அந்த அதிரடி சரவெடியாய் ஒவ்வொரு அத்தியாயமாய் வெடித்து, அமர்க்களப்படுத்துகிறது. மோ.கணேசன் அவர்கள் இந்த ஒரு நாவலோடு தன் எழுத்துப்பணியை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து இது போன்ற அறிவியல் ரீதியான, மருத்துவ ரீதியான படைப்புகளைத் தர வேண்டும் என்பதே என் விருப்பம். – ராஜேஷ்குமார் கிரைம் கதை மன்னர்

1 review for விடமாட்டேன் உன்னை-மோ. கணேசன்

  1. PRATHIBA G

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, அந்த புத்தகம் நமது அறிவையும், சிந்தனையையும், கற்பனை திறனையும், சமுகம் சார்ந்த எண்ணங்களையும், விழிப்புணர்வையும், மூட நம்பிக்கை சார்ந்த விசயங்களை மாற்றும் விதத்தில் அமைந்தால் சிறப்பு, அப்படி அமைந்த ஒரு புத்தகம் தான் திரு. மோ. கணேசன் அவர்கள் எழுதிய, விட மாட்டேன் உன்னை என்னும் நாவல். நாவலில் ஆரம்பம் ஆனந்தமாக ஆரம்பிக்க, இடையில் கதாநாயகனின் நண்பனுக்கு பேய் பிடித்தலில் ஆரம்பிக்கிற விறுவிறுப்பு எங்கும் குறையாமல் ஒவ்வொரு அத்தியாயத்தை யும் அடுத்து என்ன என்று என்னும் அளவிற்கு விறுவிறுப்பாக கொண்டு சென்று உ‌ள்ளா‌ர் ஆசிரியர், பேயுடன் நாம் பயணிக்கும் போதே, இடையில் வருகிற நாயும், கதாநாயகனின் பேய் யாரென கண்டுபிடித்து, அதற்கான அறிவியல் விளக்கமும், நம் மூட நம்பிக்கைகள் அனைத்திற்கும் வைக்கிற குட்டு, நண்பனின் இறுதி முடிவு நம் அனைவருக்கும் பாடம், அருமையான நாவல், புத்தகம் படிக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான அனுபவம் தரும்,. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி மோ. கணேசன் அவர்களே.

Add a review

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018