Description
ராமனை முன் வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் வெட்டியாகத் தின்று கொண்டு திரிகிறவனுக்கும் நம் மக்கள் “சரியான சாப்பாட்டு ராமன் அவன்” என்று ராமனின் பேரைத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டுமல்லவா?. கல்யாணராமன், ஜானகிராமன், சீத்தாராமன், அயோத்திராமன், பூட்டிய வில்லோடு திரிகிற ஆர்..எஸ்.எஸ்.ராமன் அலைகிற இப்பூமியில் நம்ம பங்குக்கு இந்தச் சாப்பாட்டு ராமனையும் இறக்கி விடுவோமே என்கிற நல்லெண்ணத்தினால் இப்புத்தகம் வருகிறது. தவிரவும், சமைக்காமல் சும்மா சாப்பிட மட்டும் செய்கிற ஆண்களாகிய நம்மை “சாப்பாட்டு ராமன்” என்று சொல்வதில் தர்க்க ரீதியாக யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஒரே ஒரு சாப்ப்ட்டு ராமனின் குறிப்புகள் இவை. ஒவ்வொரு ஆணும் இதுபோல ஒரு புத்தகம் எழுதலாம்தான். நாடு சாப்ப்ட்டு ராமங்களால் நிரம்பி வழிகிறது.
Reviews
There are no reviews yet.